எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையிலும் அவர்தான் காட்பாதர் - துருவா சர்ஜா

இந்த படம் 13 மொழிகளில் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது. ஆக்சன் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளது.
எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையிலும் அவர்தான் காட்பாதர் - துருவா சர்ஜா
Published on

அர்ஜுன் கதை திரைக்கதை எழுதியுள்ள படம் மார்டின். படத்தின் கதாநாயகனாக பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்துள்ளார். இவர் அர்ஜூனின் சகோதரி மகன். நாயகியாக அன்வேஷி ஜெயின் நடித்துள்ளார். ஏ.பி.அர்ஜுன் படத்தை இயக்கியுள்ளார். ரவி பஸ்ரு இசையமைத்துள்ளார்.

முற்றிலும் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் அந்தந்த மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி, ஜப்பான், சீனா அரபு, கொரியா என 13 மொழிகளில் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்திய தேசப்பற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் துருவா சர்ஜாவின் ஆக்சன் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

இதில் துருவா சர்ஜா பேசும்போது, எனது அங்கிள் அர்ஜுன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அவர் சம்மதம் சொன்னால் உடனே நடிக்க தயார். எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையிலும் அவர்தான் காட்பாதர் என்று கூறினார்.

அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியாகி உள்ள மார்ட்டின் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com