என் மலர்
சினிமா செய்திகள்

`அவன்மேல செம்ம கோபத்துல இருக்கேன்' என்ற சஞ்சய் தத் - லோகேஷ் கொடுத்த பதில்
- பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம்
- சஞ்சய் தத் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் பிரபலங்கள் பங்கேற்று இருந்தனர்.
அப்போது சஞ்சய் தத் பேசும்போது, ''ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும். லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். என் கதாபாத்திரத்தை 'லியோ' படத்தில் அவர் சரியாக பயன்படுத்தவில்லை. என் திறமையை வெளிப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை'', என்றார் சஞ்சய் தத் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை லோகேஷ் கனகராஜிடம் கேட்ட போது அவர் " அந்த விழா முடித்தவுடன் சஞ்சய் தத் சார் எனக்கு கால் செய்தார். அவர் நான் நகைச்சுவையாகத்தான் கூறினேன். மீடியா அதை மட்டும் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்" என்றார்.
மேலும் " அவர் கூறியது சரிதான், அவரை சரியாக பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். வரும் படங்களில் அந்த தவறை செய்யமாட்டேன்" என கூறியுள்ளார்.






