என் மலர்

  நீங்கள் தேடியது "NTR"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என்.டி.ராமராவால் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
  • இதற்கு ஒய். எஸ். ஆரின் பெயரை சூட்டியுள்ளார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

  1986- ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவால் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதற்கு தனது தந்தையான மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்டியுள்ளார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும், எம்.பி.பி.எஸ்., மருத்துவரான அவரது தந்தை அம்மாநில முதல்வராக இருந்து சுகாதாரம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கி, 3 புதிய மருத்துவக் கல்லூரிகளை அம்மாநிலத்தில் நிறுவியவர் என்று கூறி அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


  ஜூனியர் என்.டி.ஆர்

  இதற்கு ஜூனியர் என்.டி.ஆர். சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். இருவரும் மிகவும் பிரபலமான தலைவர்கள். ஒருவரின் பெயரை எடுத்துக்கொண்டு மற்றொருவரின் பெயரைச் சூட்டிக்கொண்டு வரும் இதுபோன்ற மரியாதை ஒய்.எஸ்.ஆரின் அளவை உயர்த்தாது, அது என்டிஆரின் அளவைக் குறைக்காது. பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதன் மூலம், என்டிஆர் சம்பாதித்த புகழையும், தெலுங்கு தேச வரலாற்றில் அவரது அந்தஸ்தையும், தெலுங்கு மக்களின் இதயங்களில் அவரது நினைவையும் அழிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.


  ஜெகன் மோகன் ரெட்டி

  இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெகன் மோகன் ரெட்டி, "ஆரோக்யஸ்ரீ மற்றும் 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற திட்டங்கள் மூலம் பொது சுகாதாரத்திற்காக தனது தந்தை என்ன செய்துள்ளார் என்பதற்கு இது ஒரு அங்கீகாரம் என்றும், என்டிஆரை சிறுமைப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும்" அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பை மீறி என்.டி.ராமராவ் படத்தை வெளியிட தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. #NTR #Election
  என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த ஜனவரியில் ‘என்.டி.ஆர். கதாநாயகடு’ என்ற படமும், இதன் இரண்டாம் பாகமாக என்.டி.ஆர். மகாநாயகடு என்ற படமும் வெளிவந்தன. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து இருந்தார்.

  இரண்டு படங்களையும் அதிக பொருட்செலவில் படமாக்கி இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லாமல் நஷ்டம் அடைந்தது. இந்த படத்தில் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி சம்பந்தமான காட்சிகள் இல்லை. இந்த விடுபட்ட கதையை தொகுத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் புதிய படத்தை ராம்கோபால் வர்மா இயக்கினார்.

  இதில் என்.டி.ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றியதுபோல் காட்சிகள் உள்ளன. படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்தன. இந்த படம் சந்திரபாபு நாயுடுவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுபோல் உள்ளது என்றும், எனவே தேர்தல் காலத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தனர்.

  இதைத்தொடர்ந்து படத்தை தேர்தல் கமிஷனுக்கு தயாரிப்பாளர் அனுப்பிவைத்தார். படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கூறி படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான 9 நாயகிகள் நடிக்கின்றனர். #NTRBiopic #Balakrishna
  ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

  ‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.

  இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

  கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. #NTRBiopic #Balakrishna 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். #NTRBiopic #JayaPrada #Hansika
  இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்டிஆராக நடிப்பது என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என்.டி.ஆர். மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

  மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

  படத்தில் என்டிஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.  மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

  பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துக்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, மகா என மூன்று படங்கள் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #JayaPrada #Hansika

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படத்தை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். #RajaMouli #RRR
  ‘பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

  இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி என்ன படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

  தற்போது தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

  ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது.   இதற்காக நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு, கிளாப் அடித்து பூஜையைத் தொடங்கி வைத்தார். மேலும், ‘பாகுபலி’ நாயகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா இந்த விழாவில் கலந்து கொண்டனர். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

  படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். #NandamuriHarikrishna #NTR
  அமராவதி:

  ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில், படுகாயம் அடைந்துள்ள ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவின் மனைவி வேடத்தில் மஞ்சிமாக மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic #ManjimaMohan
  சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பொதுவாகவே கவுதம் மேனனின் படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் பேசப்படுவது வழக்கம். அது இப்படத்தின் வாயிலாக மஞ்சிமா மோகனுக்கும் கிடைத்தது.

  தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதியுடன் இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தாலும், அவருக்கான வரவேற்பு அதன்பிறகு பெரிதாக இல்லை. தற்போது அவருக்கு தமிழில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் தேவராட்டம் படம் மட்டுமே உள்ளது.

  இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகி வரும் என்.டி.ஆர் வாழ்க்கைப் படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் இப்படத்தில் இணைவதன் வாயிலாக தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் மஞ்சிமா.  ஏற்கனவே அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’வின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #ManjimaMohan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க இருக்கிறார். #NTRBiopic
  பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.

  இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும், ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்கும், சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்க இருக்கின்றனர்.

  இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க இருக்கிறார். நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமை என்று ராணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

  கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். #NTRBiopic


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NTRBiopic
  தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார்.

  அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க நடிகைகள் போட்டி போடுகிறார்கள். ஆனால் ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பை தட்டி சென்றுள்ளார் ரகுல் பிரீத்தி சிங். முழு நீள படத்துக்காக அல்லாமல் தெலுங்கில் உருவாகும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரகுல் பிரீத்தி சிங். இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.  படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணா தயாரிக்கிறார். #NTRBiopic #RakulPreetSingh

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் என்.டி.ராமாராவ்வின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic
  பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.

  இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். படத்தின் கதையை கேட்டு முதலில் தயக்கம் காட்டிய வித்யாபாலன், பிறகு சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். 

  என்.டி.ஆரின் மனைவி வேடம் என்றாலும், அவரை எதிர்த்து செயல்படும் வேடம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் வித்யாபாலனுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய அதேநாளில், கடந்த மார்ச் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். #NTRBiopic

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு பயந்து தன்னுடைய படத்தை நிறுத்தி இருக்கிறார் பாலகிருஷ்ணா.
  வாழ்க்கை வரலாறு படங்களை எடுப்பதில் தென்னிந்திய இயக்குநர்களுக்கு இன்னும் அனுபவம் வேண்டும் என்று பாலிவுட் இயக்குநர்கள் கேலி பேசியதை உடைத்து சாதனை படைத்திருக்கிறது சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம். விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறும் படமாகிக் கொண்டிருக்கிறது.

  என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்தை முதலில் இயக்க இருந்த இயக்குநர் விலகிய நிலையில் பாலகிருஷ்ணாவே இயக்கும் முடிவை எடுத்தார். ஆனால் சாவித்திரி படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பாலகிருஷ்ணா தனது முயற்சியை சிலகாலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளாராம்.

  எடுத்தால் சாவித்திரி போல எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடிப்பதற்கு அவரது குடும்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் தோன்றின. அவரது அண்ணன் மகனான ஜுனியர் என்.டி.ஆர் கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  ×