search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    என்.டி.ஆர் வாழ்க்கைப்படத்தில் 9 நாயகிகள்
    X

    என்.டி.ஆர் வாழ்க்கைப்படத்தில் 9 நாயகிகள்

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான 9 நாயகிகள் நடிக்கின்றனர். #NTRBiopic #Balakrishna
    ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

    ‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.

    இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. #NTRBiopic #Balakrishna 

    Next Story
    ×