search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்கும் ஹன்சிகா
    X

    ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்கும் ஹன்சிகா

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். #NTRBiopic #JayaPrada #Hansika
    இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்டிஆராக நடிப்பது என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என்.டி.ஆர். மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    படத்தில் என்டிஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.



    மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

    பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துக்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, மகா என மூன்று படங்கள் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #JayaPrada #Hansika

    Next Story
    ×