search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NT Ramarao"

    • என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
    • என்டி ராமாராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

    என்.டி .ராமராவ் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் அரசியல்வாதி என பல துறைகளில் சாதனை படைத்தவர். ஆந்திர பிரதேசத்தின் முதல்-அமைச்சராக 3 முறை பதவி வகித்தார்.

    என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமமான நிம்மகுருவில், இது பிரிட்டிஷ் இந்தியாவின் பழைய மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்தது. அவரது மாமா மற்றும் அத்தைக்கு குழந்தை இல்லை. அவர் தனது தந்தைவழி மாமாவுக்கு தத்தெடுக்கப்பட்டார். அவர் முதன்முதலில் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வந்த ஒரு ஆசிரியரால் கல்வி கற்றார்.


    என்.டி.ஆர்

    ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, குழந்தைகள் பொதுவாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், குடும்பத்தில் முதல் ஆண் குழந்தை என்ற காரணத்திற்காக, அவரது தந்தை அவரை விஜயவாடாவுக்கு அனுப்பினார். அங்கு அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார். குண்டூரில் உள்ள ஆந்திர கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். 1947-ல், குண்டூர் மாவட்டத்தின் பிரதிபடு என்ற இடத்தில் சப்-ரிஜிஸ்ட்ராராக மெட்ராஸ் சர்வீஸ் கமிஷனில் சேர்ந்தார். பின்னர் ஆந்திர சினிமாவில் நுழைந்தார். ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் நினைவுக்கு வருபவர் என்.டி. ராமராவ்.

    'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். ராமரின் குணங்களாக வர்ணிக்கப்படும் அமைதியும், சாந்தமும் ராமராக நடித்த என்.டி.ஆரின் முகத்தில் தவழும். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அலட்டிக் கொள்ளாமல் ஆனால், ஆழமாக நடித்திருப்பார். அவரை ராமர் வேடத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் சம்பூர்ண ராமாயணம் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.

    அதேபோல, கிருஷ்ணர் என்றாலும் ராமராவ்தான் கண் முன் நிற்பார். 'மாயா பஜார்', 'கர்ணன்' படங்களில் கிருஷ்ணராகத் தோன்றுவார். இதிகாசப்படி கிருஷ்ணர் கொஞ்சம் எதிரிகளிடம் குறும்புடன் விளையாடுவார். ராமராக நடிக்கும்போது அமைதியும் சாந்தமும் ராமராவின் உணர்ச்சி பாவங்களாக இருந்தது என்றால், கிருஷ்ணராக நடிக்கும்போதோ அதற்கேற்ப அவர் முகத்தில் குமிழ் நகையும் குறும்பும் கொப்பளிக்கும்.


    என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர்

    தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற திரைப் பாடல்களில் ஒன்றான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம்..' பாடலில், வயோதிகராக வந்து அசத்துவார் ராமராவ். கர்ணனனாக நடிக்கும் சிவாஜி கணேசனிடம் தர்மத்தை தானமாகப் பெற முயலும்போது, கர்ணனின் நிலையைப் பார்த்து பரிதாபப் பார்வை பார்ப்பார். அதேநேரம், அவனுடைய தர்மப் பலன்கள் அனைத்தையும் பெற்றால்தான் கர்ணன் உயிர்போகும் என்பதால் தானத்தைப் பெற்றுவிடுவதில் காட்டும் முனைப்பு என்று நடிப்பில் என்.டி. ராமராவ் கொடி நாட்டியிருப்பார்.

    ராமராவ் நடித்து 1951-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பாதாள பைரவி' திரைப்படத்தை இந்த தலைமுறை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையும் ரசிக்கும். என்டி ராமராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். தகுதியற்ற ஆட்சியில் இருந்து ஆந்திராவை விடுவிப்ப தற்கான வரலாற்று தேவையின் அடிப்படையில் இந்த கட்சி ஆரம்பிக்க ப்பட்டதாக அவர் கூறினார். ஊழலில் ஈடுபடாத படித்த வேட்பா ளர்களை நிறுத்த முடிவு செய்தார்.

    இது அந்த நேரத்தில் ஒரு புதுமையான அரசியல் கருத்தாக இருந்தது. எம்ஜிஆர் பாணியில் திறந்த வேனில் சென்று ஆந்திரா முழுவதும் 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். தெலுங்கு மக்களின் சுயமரியாதை என்ற நோக்கத்துடன் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது. இதனால் 1983-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் 202 இடங்களில் வென்று அவர் முதல் முறையாக முதல் அமைச்சரானார். தொடர்ந்து 3 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக மக்கள் பணியாற்றினார்.

    என்.டி. ராமாராவ் 1996 -ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் 72 வயதில் மாரடைப்பால் காலமானார். அவர் தகனம் செய்யப்பட்டார். அவரது அஸ்தியை அவரது 2-வது மனைவி லட்சுமி பார்வதி எட்டு ஆண்டு களுக்குப் பிறகு, மே 2004 -ல் ஸ்ரீரங்கப்ப ட்டினத்தில் கரைத்தார்.


    என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர் -இந்திரா காந்தி

    உயிருடன் இருந்தவரை அந்திர மக்களுக்கு வாழும் கடவுளாகவே விளங்கிய என்.டி.ஆர்., சினிமாவையும் தாண்டி சென்னை மக்களின் தாகம் தணிக்க உதவியவர். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ராமராவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரின் பெயரிலும் ராமன் உண்டு. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டார் என்றால் தெலுங்குத் திரையுலகில் என்.டி.ஆர். இருவருமே அரசியலில் ஈடுபட்டு மாநில முதல்-அமைச்சரானவர்கள்.

    எம்.ஜி.ஆருக்கும் என்.டி.ராமராவுக்கும் உள்ள நட்பும் நெருக்கமும் நாடறிந்தது. 'எனது குருநாதர் எம்.ஜி.ஆர்.' என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் ராமராவ்.

    ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்-அமைச்சராக என்.டி. ராமராவ் பதவியேற்றார். தன்னிடம் ஆசிபெறுவதற்காக சென்னை வந்த என்.டி.ராமராவுக்கு அவரை கவுரவிக்கும் விதமாக தனது தோட்டத்தில் எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்படியே சென்னை நகரின் குடிநீர் பற்றாக்குறையையும் அதைத் தீர்க்க ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் யோசனையையும் என்.டி.ராமராவிடம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர் சொன்னால் என்.டி.ஆரிடம் மறுப்பேது? அப்போது உருவானதுதான் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் 'தெலுங்கு கங்கைத் திட்டம்'. பதவியேற்ற அடுத்த 4 மாதங்களில் 1983,மே 25-ந் தேதி சென்னையில் நடந்த தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் சென்னை நகரின் தாகம் தீர்க்க உதவியிருக்கிறார் நூற்றாண்டு நாயகர் என்.டி. ராமராவ்.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம் மண்டலம் வேமகிரியில் இன்றும் நாளையும் முன்னாள் முதல் -அமைச்சர் எம் டி ராமராவ் நூற்றாண்டு விழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. என்.டி.ஆர் நூற்றாண்டு பிறந்த ஆண்டு என்பதாலும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவப்பட்டு 41 ஆண்டுகள் ஆனதாலும், மாநாடு வரலாற்றில் இடம்பிடிக்க எல்லாம் தயாராகி விட்டது. இதற்காக 10 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    வெகு தொலைவில் அமர்ந்திருப்ப வர்களும் நிகழ்வைக் காணும் வகையில் 20 எல்இடி திரைகள் பொருத்த ப்பட்டுள்ளன. நாளை மாலை 15 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டம் நடக்கிறது. சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அமர்வதற்காக 4,000 சதுர அடியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    • ஆந்திராவின் முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி. ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தற்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியுள்ளார்.

    ஆந்திராவின் முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி. ராமாராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம். அவரது ஆட்சியில் விமான நிலையம், தொழில் நுட்ப நிறுவனங்கள் ஏராளமானவற்றை கொண்டு வந்தார். இந்த நிறுவனங்கள் மூலம் இப்போது எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதற்கெல்லாம் காரணம் சந்திரபாபுவின் திட்டமே. அரசியலில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. அவர் நல்ல முதல்-அமைச்சர்.

    நடிகர் ரஜினி தனது உரையில் எந்த கட்சியையும், தலைவரையும் விமர்சிக்கவில்லை. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து ரஜினிகாந்த் எதுவும் குறிப்பிடாவிட்டாலும், அவரை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினியை தொடர்ந்து நடிகர் சுமன் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசி உள்ளது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடிகர் சுமனின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திராவில் நேற்று நடைபெற்றது.
    • இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டு இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வந்தார்.


    300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


    இதையடுத்து, என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ரஜினிகாந்த், என்.டி.ராமாராவ் மருமகனும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு மற்றும் நடிகரும் என்.டி.ராமாராவின் மகனுமாகிய பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, பாலய்யா ஒரு தட்டு தட்டினால் ஜீப் பறக்கும். அதை ரஜினிகாந்தோ, அமிதாப் பச்சனோ, ஷாருக்கானோ, சல்மான்கானோ செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாலய்யா செய்தால் தான் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனென்றால் மக்கள் அவரை பாலய்யாவாக மட்டும் பார்க்கவில்லை; என்.டி.ராமாராவாக பார்க்கிறார்கள் என்று பேசினார்.

    காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் என்.டி.ராமராவ் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று சந்திரபாபு நாயுடுவுக்கு லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ChandraBabuNaidu #NTRamarao
    நகரி:

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்த என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஐதராபாத்தில் உள்ள என்.டி.ராமராவ் சமாதி முன் மவுனதீட்சை மேற்கொண்டார்.

    காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆந்திர மக்களின் தன்மானத்தை டெல்லியில் அடகு வைப்பதை தடுக்க மறைந்த முதல்வரும் எனது கணவருமான என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

    அவர் உயிரோடு இருந்த வரை காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார். அப்படிப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியையும் முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்டு என் கணவரின் மரணத்திற்கும் சந்திரபாபு நாயுடு காரணமானார். தற்போது என்.டி.ஆர். எதிர்க்கட்சியாக பார்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததை அவர் ஆத்மா மன்னிக்காது.

    சந்திரபாபு நாயுடு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். ஆனால் என் கணவர் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த பிறகு தேர்தல் பிரசாரத்தின் போது என்.டி.ராமராவின் பெயரையோ படத்தையோ சந்திரபாபு நாயுடு உபயோகிக்கக்கூடாது. இதற்காக நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் லட்சுமி பார்வதி தெரிவித்தார். #ChandraBabuNaidu #NTRamarao
    ×