தனுஷ்- எச். வினோத் கூட்டணியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

‘ஜன நாயகன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ்- எச். வினோத் கூட்டணியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
Published on

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் எச்.வினோத். இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. விஜயின் கடைசி படம் 'ஜன நாயகன்' எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத்- நடிகர் தனுஷ் இணையும் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com