என் மலர்
நீங்கள் தேடியது "Thirukkurals"
- தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
- சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கருவலூரை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -ரோகினி. இவர்களது மகள் இனியா (வயது 5).
இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் .இந்த நிலையில் சீர்காழியில் நடந்த ஜாக்கி புக் ஆப் வோல்டு ரெக்கார்ட நிறுவனம் நடத்தும் 10நிமிட சவால் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.
- மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- மாவட்ட அளவில் ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பபுரம், கணக்க நாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்தி ரத்தில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு நந்திதா என்ற மகளும், அத்திரி சித்தாத் என்ற மகனும் உள்ளனர். நந்திதா பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
3-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஓவிய போட்டிகளில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளதோடு எண்ணற்ற சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார்.
இவர் 1,330 திருக்குறள் வரிகளால் பென்சில் மூலம் திருவள்ளுவரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அதற்கு பார்டராக 133 அதிகாரங்களையும் எழுதி தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காண்பித்து பாராட்டினை பெற்றார்.
மேலும் சட்ட மேதை அம்பேத்கார் படத்தினை அவர் இயற்றிய சட்டங்களை கொண்டு பென்சிலால் புதிய முயற்சியாக வரைந்து கொண்டிருக்கிறார்.
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் சாதனை படைத்தது மட்டு மல்லாது மாநில அளவிலான போட்டிகளிலும் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் மாணவி நந்திதா கூறினார்.






