என் மலர்
இந்தியா

காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு- 7 பேர் பலி
- வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- காயம் அடைந்த 5 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், கடந்த 14-ந்தேதி திடீர் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடுகள், ஓட்டல்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத்காதி கிராமத்தில் மேகவடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேகவெடிப்பால் 5 பேரும், நிலச்சரிவால் 2 பேரும் பலியானார்கள்.
மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். பலர் மாயமாகி உள்ளனர். சம்பவ இடத்திற்கு ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை போலீசார், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காயம் அடைந்த 5 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கதுவா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகார்ட், சாங்மா கிராமங்களிலும் லகான்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கில்வான்-வாட்லியும் நிலச்சரிவு ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.






