என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு

    • ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
    • தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    Next Story
    ×