என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் நள்ளிரவில் பலத்த மழை
- தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
- வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்–களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெயில் நிலவி வருகிறது.
இந்த வெப்பம் மிகுதியின் காரணமாக கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சேலம், ஏற்காடு, மேட்டூர், அயோத்தியாப்–பட்டணம், காடையாம்பட்டி, எடப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை 2 மணி நேரம் விடாமல் ெபய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை தூறிக்கொண்டு இருந்தது. இதனால் வீட்டில் நிலவிய புழுக்கம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.
இதனால் வீடுகளில் பொதுமக்கள் இரவு நிம்மதியாக தூங்கினர். இந்த திடீர் மழையால் விவசாயி–கள் மகிழ்ச்சி அடைந்துள்ள–னர். விளை நிலங்களில் சாகு–படி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை சற்று உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.






