என் மலர்

  நீங்கள் தேடியது "Myskkin"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
  • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

  விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

  விஜய் - லோகேஷ் கனகராஜ்

  விஜய் - லோகேஷ் கனகராஜ்

   

  ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

  மிஷ்கின்

  மிஷ்கின்

   

  இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இப்படத்தின் நான்காவது வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் இதில் நான்காவது வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து முடித்துள்ள படம் கொலை.
  • 'கொலை' படத்தின் செய்தியாளகர்கள் சந்திப்பில் இயக்குனர் மிஷ்கின் கலந்துக் கொண்டார்.

  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

   

  கொலை 

  கொலை 

  இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், "தயாரிப்பாளர் தனஞ்செயன் சில நாட்களுக்கு முன்பு அழைத்து ஒரு விழாவிற்கு நீங்கள் கெஸ்டாக வரவேண்டும் என்றார். படம் பெயர் என்ன என்று கேட்டதும் கொலை என்றார். அந்த விழாவிற்கு நான்தான் பொருத்தமான விருந்தினர் கண்டிப்பாக வருகிறேன் என்றேன்.

   

  மிஷ்கின் 

  மிஷ்கின் 

  இயக்குனர் பாலாஜியை ரொம்ப நாட்களாக எனக்குத் தெரியும். ஒரு சந்திப்பில் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தபோது அவர் ஆழமாக பேசக்கூடியவர் என்பது தெரிந்தது. படத்தின் டிரைலர் பார்த்தேன் சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளராக இருந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய நடிகராக விஜய் ஆண்டனி வளர்ந்திருப்பது சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. கொலை படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

   

  மிஷ்கின் 

  மிஷ்கின் 

  இதற்கிடையே மிஷ்கின் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு பின்புறமிருந்த சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கடுப்பான மிஷ்கின் அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதோடு, பேச வேண்டுமென்றால் வெளியே போய் பேசுங்கள் சார் ப்ளீஸ் என்று கோபமாக கூறினார்.   • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 14-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


  செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடித்திருக்கிறார்.

  கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Psycho #UdhayanidhiStalin #Myskkin
  உதயநிதி ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

  இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ், நித்யா மேனன் நடிக்கின்றனர். இயக்குநர் ராம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

  இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், சைக்கோ பர்ஸ்ட் லுக் வருகிற 7-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். அதே தேதியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #Psycho #UdhayanidhiStalin #AditiRaoHydari #Myskkin

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிஷ்கின் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அதிதி ராவ் ஹிடாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #UdhayanidhiStalin #AditiRaoHydari
  இயக்குனர் மிஷ்கின் துப்பறிவாளன் படத்திற்கு பிறகு சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, தான் இயக்கும் அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

  அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளனர்.

  மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார்.  மிஷ்கின் படங்களில் கதை, கதாநாயகர்கள் அளவுக்கு ஒளிப்பதிவும் பெரியளவில் பேசப்படும். வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்தாலும் மிஷ்கின் படத்தின் காட்சிகள் தனித்து தெரியும் விதத்தில் அதன் ஒளிப்பதிவு அமைந்திருக்கும்.

  அதே சமயம் பி.சி.ஸ்ரீராம் எந்த இயக்குனர்களின் படங்களில் பணியாற்றினாலும், அவரது காட்சியும் தனித்துத் தெரியும். இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #UdhayanidhiStalin #AditiRaoHydari

  ×