என் மலர்

  நீங்கள் தேடியது "PC Sriram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
  • சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட்டைக்காளி வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

  தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

   

  பி.சி.ஸ்ரீராம்

  பி.சி.ஸ்ரீராம்

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்.ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Psycho #UdhayanidhiStalin #Myskkin
  உதயநிதி ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

  இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ், நித்யா மேனன் நடிக்கின்றனர். இயக்குநர் ராம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

  இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், சைக்கோ பர்ஸ்ட் லுக் வருகிற 7-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். அதே தேதியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #Psycho #UdhayanidhiStalin #AditiRaoHydari #Myskkin

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Udhayanidhi #Mysskin
  நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கும் நிலையில், உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

  முன்னதாக மிஷ்கின் சாந்தணுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், அதே கதையில் உதயநிதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த படத்தை உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.   மிஷ்கின் - சாந்தணு கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது. #Udhayanidhi #Mysskin 

  ×