வெற்றிமாறனுடன் நான் இணையவுள்ளேன் - பிரபல ஒளிப்பதிவாளர் பதிவு

இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட்டைக்காளி வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
வெற்றிமாறன்
வெற்றிமாறன்
Published on

தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

பி.சி.ஸ்ரீராம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்.ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com