search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.சி.ஸ்ரீராம்"

    • அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை இன்று இயக்குநர் சீனு ராமசாமி தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
    • சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட்டைக்காளி வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

    பி.சி.ஸ்ரீராம்

    பி.சி.ஸ்ரீராம்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்.ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.சி.ஸ்ரீராம்.
    • இவர் இயக்கத்தில் வெளியான மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

    பி.சி.ஸ்ரீராம்

    பி.சி.ஸ்ரீராம்

    இந்த நிலையில் இனிமேல் படங்கள் இயக்க மாட்டேன் என்று பி.சி.ஸ்ரீராம் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், ''என் மனதுக்கு பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொள்வேன். எனக்கு கதை முழுவதும் சொல்ல வேண்டும். கதை பிடிக்காமல் எந்த படமும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இதுவரை நான் இயக்குனராக வருவதற்கு சில முயற்சிகள் செய்தேன். ஆனால் நல்ல பலன் வரவில்லை. ஒளிப்பதிவு வேறு, சினிமாவை இயக்குவது வேறு என்பதை புரிந்து கொண்டேன். இயக்குனராக அனைத்து பிரிவுகளையும் கையாளும் திறமை எனக்கு இல்லை. அதனால் தான் நான் இயக்கிய குருதிப்புனல் உள்ளிட்ட மூன்று படங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. எனவே இனி சினிமாவை இயக்கும் எண்ணம் இல்லை" என்று அவர் கூறினார்.

    ×