search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nassar"

    • அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை இன்று இயக்குநர் சீனு ராமசாமி தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.
    • இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் நாளை (பிப் 29) காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, லிங்குசாமி, சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் நாசர் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாசர்.
    • நாசர் சினிமாத்துறையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.

    இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார். அதன்பின் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர் என பண்முகத்தன்மை கொண்டவர்.

    நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகிக்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நாசர், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

    இந்நிலையில் நாசர் பல வெப் சீரிஸ்களிலும், சில படங்களில் பிசியாக நடித்து வருவதாகவும் இது போன்ற வீண் வதந்திகளை ஏன் பரப்புகிறார்கள் என்று கண்டுபிடிக்க கூட அவருக்கு நேரம் இல்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக நடிகர் சங்க கட்டிடப் பணியை விரைவில் கட்டிமுடிப்பதாக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி முதல்வரின் கரங்களால் திறந்து வைக்க முழு வீச்சில் அவர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கும் தேர்வு குழுவில் எஸ்.பி. முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் கரு. பழனியப்பன் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    தமிழ் திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினராக கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருது தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். இந்த விருதினை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

    நாசர்
    நாசர்

    தமிழ் திரையுலகில் பல பரிமாணங்களில் சிறந்து விளங்கும் முன்னணி நடிகர் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் விருதாளரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் உறுப்பினராக நியமித்ததற்காக நன்றி கூறும் விதமாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். 

    அந்த கடிதத்தில், “பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும். பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி.

    கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த் - எஸ்நயா நடிப்பில் உருவாகி இருக்கும் `ராக்கி' படத்தின் முன்னோட்டம். #RockyTheRevenge #Srikanth
    பி.எம்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பொகாடியா தாயாரித்துள்ள படம் `ராக்கி'.

    ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்நயா நாயகியாக நடித்திருக்கிறார். நாசர், பிரம்மானந்தம், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே சுந்தர், கராத்தே ராஜா, ரமேஷ்.டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது.

    படத்தொகுப்பு - பி.லெனின், இசை - பாப்பி லாஹிரி, சரண் அர்ஜூன், ஒளிப்பதிவு - அஸ்மல் கான், பாடல்கள் - ஏ.ஆர்.பி. ஜெயராம், நடனம் - பாப்பி, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - கே.சி.பொகாடியா.



    விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #RockyTheRevenge #Srikanth #Eshanya

    ராக்கி டீசர்:

    ×