என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sayaji shinde"

    • 'பூவெல்லாம் உன் வாசம்', 'அழகி', 'பாபா', 'வேலாயுதம்', 'அழகிய தமிழ் மகன்', 'வேட்டைக்காரன்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே.
    • இவர் மீது இயக்குனர் சச்சின் என்பவர் மும்பை போலீசிலும், மராத்தி திரைப்பட கழகத்திலும் புகார் அளித்துள்ளார்.

    தமிழில் 'பூவெல்லாம் உன் வாசம்', 'அழகி', 'பாபா', 'வேலாயுதம்', 'அழகிய தமிழ் மகன்', 'வேட்டைக்காரன்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள படங்களிலும் வில்லன், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

     

    சாயாஜி ஷிண்டே

    சாயாஜி ஷிண்டே

    இந்நிலையில் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் சச்சின் என்பவர் மும்பை போலீசிலும், மராத்தி திரைப்பட கழகத்திலும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''எனது திரைப்படத்தில் நடிக்க சாயாஜி ஷிண்டேவை ஒப்பந்தம் செய்தேன். இதற்காக அவருக்கு சம்பளம் பேசி ரூ.5 லட்சம் கொடுத்தேன். ஆனால் படப்பிடிப்பை தொடங்கிய நேரத்தில் படத்தின் கதையை மாற்றும்படி கூறினார். நான் மறுத்ததும் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறி விட்டார். இதனால் ரூ.17 லட்சம் இழப்பு ஏற்பட்டது. நாங்கள் கொடுத்த ரூ.5 லட்சத்தையும் திருப்பிதரவில்லை. எனவே சாயாஜி ஷிண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த் - எஸ்நயா நடிப்பில் உருவாகி இருக்கும் `ராக்கி' படத்தின் முன்னோட்டம். #RockyTheRevenge #Srikanth
    பி.எம்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பொகாடியா தாயாரித்துள்ள படம் `ராக்கி'.

    ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்நயா நாயகியாக நடித்திருக்கிறார். நாசர், பிரம்மானந்தம், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே சுந்தர், கராத்தே ராஜா, ரமேஷ்.டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது.

    படத்தொகுப்பு - பி.லெனின், இசை - பாப்பி லாஹிரி, சரண் அர்ஜூன், ஒளிப்பதிவு - அஸ்மல் கான், பாடல்கள் - ஏ.ஆர்.பி. ஜெயராம், நடனம் - பாப்பி, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - கே.சி.பொகாடியா.



    விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #RockyTheRevenge #Srikanth #Eshanya

    ராக்கி டீசர்:

    டி.எஸ்.ராஜ்குமார் இயக்கத்தில் சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் 'அகோரி' படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டார். #Aghori #AghoriTeaser #Vishal
    ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து 'அகோரி' என்ற படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே அகோரியாக நடிக்கிறார்.

    நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்க, வில்லனாக சகுல்லா மதுபாபு நடிக்கிறார். மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன் உள்ளிட் பலரும் நடித்துள்ளனர். 



    சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி படம் கதை உருவாகி இருக்கிறது. 'அகோரி' படத்தின் டீசரை நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் வெளியிட்டார். படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Aghori #AghoriTeaser #Vishal

    பாரதியாக நடித்து பிரபலமான சாயாஜி ஷிண்டே, தற்போது அகோரி படத்தில் சிவனடியாராக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார். #Aghori
    பாரதியாக நடித்து பிரபலம் ஆனவர் சாயாஜி ஷிண்டே. இவரது வித்தியாசமான நடிப்பில் ‘அகோரி’ என்கிற படம் தயாராகி வருகிறது. சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

    மேலும் கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன. இப்படத்தில் நடிப்பது பற்றி அவர் பேசும் போது, “தமிழில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டபோது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. 

    இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன். நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
    ×