என் மலர்
சினிமா செய்திகள்

உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்கனு தெரியும், ஆனா... விஜய்க்கு நாசர் விடுத்த கோரிக்கை
- உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும்.
- ஏனெனில் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
மலேசியா:
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் பேசியதாவது:
அமைதியும் பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் எதுவும் இல்லை.
படுத்த படுக்கையாக இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் நீங்கள். அதற்கு நன்றிகூற இந்த மேடை மட்டுமின்றி, எந்தச் சூழலிலும் நான் அதை சொல்லிக் கொண்டே இருப்பேன்.
இந்த விழாவுக்கு நான் போறேன்னு சொன்னதும், அவன் விஜய் அண்ணாவுக்கு விஷ் பண்னேன்னு சொல்லிடுங்க என்றான்.
நடிகர் சங்கத்துக்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தீர்கள். அதற்கு என்னுடைய நன்றி.
இந்தப் படத்தில் இயக்குனர் உள்பட டீ தருகிற பையன் வரை அனைவரிடமும் ஒரு பதட்டம் இருந்தது. தளபதியின் கடைசி படம், ஒரு தவறும் நேர்ந்து விடக்கூடாதே என.
நீங்கள் புத்தனைப்போல சிரித்துக்கொண்டு எப்போதும்போல நடித்துக் கொண்டிருந்தீர்கள்.
எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும். நீங்கள் டயலாக் பேசலாம், நான் எடுத்த முடிவை நானே மாத்த மாட்டேன் என்று.
ஆனால், ஒரு முடிவு, இங்க இருக்கிற ரசிகர்களோட வேண்டுதலா உங்க முன் வைக்கிறேன். உங்க எல்லார் சார்பாகவும் தம்பிக்கு நான் ஒரு வேண்டுதலா வைக்கிறேன்.
உங்களை யாரும் விமர்சிக்கப் போறது கிடையாது. விமர்சனங்கள் வரும். ஏனென்றால் நீங்கள் விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
இவர்கள் எல்லோருக்கும் நீங்கள் வேண்டும். தயவு செய்து நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஜனநாயகன் வெற்றி பெறுவது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் மிக்க நன்றி என தெரிவித்தார்.






