search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Aditi Rao Hydari"

  • இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
  • இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார்.

  கமல்ஹாசனின் 'தூங்கா வனம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்.


  அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. சைமன் கே கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். 

  காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதி ராவ் தனக்கு வந்த காதல் கடிதத்தை தனது அம்மாவிடம் காட்டி பெருமைபட்டதாக கூறியுள்ளார்.
  மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பாலிவுட், கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தனது காதல் அனுபவங்கள் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

  நான் 5ம் வகுப்பு படித்தபோது எனக்கு முதன்முதலாக காதல் கடிதம் வந்தது. அப்பொழுது எனக்கு வெறும் 9 வயது தான். என் சீனியர் ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தார். அந்த கடிதம் கிடைத்த வேகத்தில் என்னை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டனர். அந்த கடிதத்தில் நான் ரொம்ப அழகாக உள்ளேன் என்று ஏதேதோ எழுதியிருந்தது.  வீட்டிற்கு சென்ற உடன் அம்மாவிடம் அந்த கடிதத்தை பெருமையாக காட்டினேன். எனக்கு 9 வயசு தானே. அதனால் அந்த கடிதம் பெரிதாக தெரியவில்லை. எனக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றது. எனக்கு எப்படி டேட்டிங் செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன். அதன் பிறகு படங்களில் நடிக்கத் துவங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  இந்தியாவிலும் ‘மீ டு’ பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #AditiRaoHydari #MeToo
  மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதிராவ் ஹிடாரி. தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார். 

  அதிதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை பற்றி வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

  ’என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

  நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவையில்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன்பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. 
  பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ, மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். 

  நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீ டு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது. இவ்வாறு அதிதிராவ் கூறினார். #AditiRaoHydari #MeToo

  வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அதிதி ராவ் ஹிடாரி பாடல் ஒன்றை பாடுகிறார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
  ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்த ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

  வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


  ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
   
  பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில், அதிதி ராவ் நாயகியாக நடிக்கும் நிலையில், இயக்குநராக தனுஷ் தன்னை கவர்ந்துவிட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #DD2 #Dhanush
  தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

  தற்போது பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தனுஷ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல்  உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

  காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு பிறகு அதிதி ராவ் நடிக்கும் படம் இது. தனுஷ் இயக்கத்தில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது,   ‘முன்பே ஒருமுறை தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஷாட் வைப்பது புதுமையாகவும் வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது. ஒரு இயக்குனராக என்னை கவர்ந்துவிட்டார் தனுஷ்’ என்று பாராட்டி உள்ளார். #DD2 #Dhanush #AditiRaoHydari

  பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், நடிகை அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel
  தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

  தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர் தற்போது மீண்டும் இயக்கத்தில் களம் இறங்கி உள்ளார். அந்த வகையில் பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வருகிறார். 

  படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.   தற்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை அனு இமானுவேல் இணைந்துள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு தமிழ் தவிர தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel

  பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் பலரும் படத்தில் இணைந்துள்ளனர். #DD2 #Dhanush
  தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

  இந்த நிலையில், பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஏ.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

  இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அதிதி ராவ் ஹிடாரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படத்தின் கலை பணிகளை முத்துராஜ் மேற்கொள்கிறார். #DD2 #Dhanush

  ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Psycho #UdhayanidhiStalin #Myskkin
  உதயநிதி ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

  இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ், நித்யா மேனன் நடிக்கின்றனர். இயக்குநர் ராம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

  இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், சைக்கோ பர்ஸ்ட் லுக் வருகிற 7-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். அதே தேதியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #Psycho #UdhayanidhiStalin #AditiRaoHydari #Myskkin

  மிஷ்கின் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அதிதி ராவ் ஹிடாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #UdhayanidhiStalin #AditiRaoHydari
  இயக்குனர் மிஷ்கின் துப்பறிவாளன் படத்திற்கு பிறகு சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, தான் இயக்கும் அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

  அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளனர்.

  மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார்.  மிஷ்கின் படங்களில் கதை, கதாநாயகர்கள் அளவுக்கு ஒளிப்பதிவும் பெரியளவில் பேசப்படும். வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்தாலும் மிஷ்கின் படத்தின் காட்சிகள் தனித்து தெரியும் விதத்தில் அதன் ஒளிப்பதிவு அமைந்திருக்கும்.

  அதே சமயம் பி.சி.ஸ்ரீராம் எந்த இயக்குனர்களின் படங்களில் பணியாற்றினாலும், அவரது காட்சியும் தனித்துத் தெரியும். இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #UdhayanidhiStalin #AditiRaoHydari

  ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ் ஹிடாரி, அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது என்று கூறியுருக்கிறார். #AditiRaoHydari
  ‘காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

  வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என்னுடைய ஆடைகளை நான்தான் தேர்வு செய்வேன். அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது. அணியும் ஆடைகளை வைத்து மதிப்பிடும் பழக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது.

  என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். இந்த ஆண்டு தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழிலும், இந்தியிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்கள் நடிக்கும் வழக்கம் இல்லை.  சினிமாவில் என்னுடைய பயணம் நிதானமாக தான் இருக்கும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதற்காக மார்க்கெட்டையே இழந்துட்டேன் என்றும், வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார். #AditiRaoHydari
  ×