அடுத்த ஆக்ஷன் படத்தை இயக்கும் கமல்ஹாசன் பட இயக்குனர்

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார்.
அடுத்த ஆக்ஷன் படத்தை இயக்கும் கமல்ஹாசன் பட இயக்குனர்
Published on

கமல்ஹாசனின் 'தூங்கா வனம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. சைமன் கே கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com