சித்தார்த்-அதிதி ராவ் ஹைதாரி திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம்.புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர்.
சித்தார்த்-அதிதி ராவ் ஹைதாரி திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
Published on

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகின.

மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் விரைவில் திருமணம் குறித்து வெளியிடுவோம் என்றும் கூறி இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர்.

சித்தார்த்-அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com