காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய மிஷ்கின்.. லியோ படம் குறித்து பதிவு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய மிஷ்கின்.. லியோ படம் குறித்து பதிவு
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ
லியோ

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இணைந்திருந்தார். இந்நிலையில் லியோ படத்தில் மிஷ்கினின் பகுதி முடிந்துவிட்டதாகவும் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை திரும்பிவிட்டதாகவும் மிஷ்கின் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் பதிவு
மிஷ்கின் பதிவு

மிஷ்கின் பதிவு

அவர் பதிவிட்டிருப்பது, இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின் என்று நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com