தளபதி 67 படத்தில் 4வது வில்லனாக விஷால் பட இயக்குனர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய்
விஜய்
Published on

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

மிஷ்கின்
மிஷ்கின்

மிஷ்கின்

இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இப்படத்தின் நான்காவது வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் இதில் நான்காவது வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com