என் மலர்
நீங்கள் தேடியது "டி.ராஜேந்தர்"
- டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
- மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்!
மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை', சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த 'எங்க வீட்டு வேலன்' போன்ற திரைப்படங்களையும் மீண்டும், டி.ஆர்.டாக்கீஸ் வெளியிடுகிறது!
இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக டி.ஆர்.டாக்கீஸ், ஒரு யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது!

- டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் டி.ராஜேந்தரை கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், மேல் சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக டி.ராஜேந்தர் அமெரிக்க செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று(14.6.2022) இரவு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

டி.ராஜேந்தர் - கமல்ஹாசன் - குரலரசன்
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் டி.ராஜேந்தரை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்துள்ளார். இதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. டி.ராஜேந்தருடன், சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினரும் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, மேல் சிகிச்சை பெற டி.ராஜேந்தர் கடந்த 14-ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.

உஷா - சிம்பு - டி.ராஜேந்தர்
இந்நிலையில் டி.ராஜேந்தர் அமெரிக்கா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை நிம்மதி அடையவைத்துள்ளது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் டி ராஜேந்தர் குணம் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவுடன் டி.ராஜேந்தர் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.






