search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்ஹாசன்"

    • நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டிநிருந்தார்.

    நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் டப்பிங் மற்றும் பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

    கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளிவந்த கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டிநிருந்தார்.

    அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தை தயாரித்துள்ளார். அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் தற்பொழுது கெடப்பை மாற்றியுள்ளார்.

    அவரது புது தோற்ற புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கவரைப்பேட்டை ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • பொதுமக்களின் உயிர் முக்கியமானது, அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.

    இந்த விஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர். அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

    • கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
    • இப்படத்தில் நடிக்க கமல்ஹாசன் கடும் உடற்பயிற்சிகள் செய்து முழுமையாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

    கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் 'தக்லைப்' படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியன் 3-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

    இந்த நிலையில் அடுத்து பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.

    இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையிலும் பட வேலைகள் தொடங்காமல் இருந்தது.

    இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சண்டை பயிற்சி இயக்குனர்கள் இயக்குவதால் இது முழுநீள அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் கடும் உடற்பயிற்சிகள் செய்து முழுமையாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.
    • ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.

    சென்னை:

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேசத்துக்கும் மக்களுக்கும் ரத்தன் டாடாவின் பங்களிப்பு அளவிட முடியாதது.

    சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.

    ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.

    இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காற்றிய நவீன இந்தியாவின் பொக்கிஷம் ரத்தன் டாடா.

    ரத்தன் டாடாவின் உண்மையான செல்வம் பொருளில் இல்லை. அவரது நேர்மை, தேசபக்தி, நெறிமுறையில் உள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த கதாநாயகன் ரத்தன் டாடா.

    ரத்தன் டாடா மறைவால் வாடும் டாடா குழுமம் மற்றும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம்
    • பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

    இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியானப்பிறகு உலமமுழுவது உள்ள மக்கள் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்தியன் தாத்தா தோற்றம் முதல், பிரியா பவானி சங்கர் நடிப்பு, ஷங்கர் இயக்கம் வரை இணையத்தில் கலாய்த்தி தள்ளினர்.

    இதனால் இந்தியன் -3 திரைப்படம் திரையரங்க்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்பதால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இதுக்குறித்து இணையத்தில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. இதுக்குறித்த எந்த அதிகாரப்பூர்வத் தகவலகளும் வெளியாகவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்பல்லோ முருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்தபோது அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்சனையும் இருந்தது. இதைத்தொடர்ந்து நெஞ்சுவலியும் ஏற்பட்டு உள்ளது.

    இதுபற்றி மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரஜினி காந்தை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் வெளியானதும் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனையடுத்து ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கவர்னர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன் என கூறியுள்ளார்.

    முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்பல்லோ முருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    • காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம்.
    • பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள்.
    • பாப்பம்மாள் உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.

    விவசாயத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் (109) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன்.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர்.

    1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர்.

    1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

    1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

    1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார்.

    தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள் அவர்கள்.

    பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, "உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!" என்று அவரை வாழ்த்தினேன்.

    கழக முப்பெரும் விழாவில், "ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்" என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

    அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்.

    என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன.

    அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.

    திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கழகம் தொடங்கிய காலத்திலேயே உறுப்பினராகி, கழக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவில், பெரியார் விருது பெற்ற கோவை தேக்கம்பட்டியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடி பாப்பம்மாள் பாட்டி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம்.

    கழகத்தின் 15 மாநில மாநாடுகளில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி அனைத்து போராட்டங்களிலும் களம் கண்டவர்.

    நீட் விலக்கை வலியுறுத்தி கடந்தாண்டு நம் இளைஞரணி நடத்திய கையெழுத்து இயக்கம் வரை கொள்கை உறுதியோடு களத்தில் நின்ற பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது
    • பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும்.

    சென்னை:

    சென்னையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வசித்த பகுதி சாலைக்கு அவரது பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

    லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது.

    பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    இயக்குநர் மணிரத்னம், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் "தக் லைஃப்". கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் இந்த படத்தின் மூலம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

    தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

     


    இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    வீடியோவில் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மக்கள் நீதி மைய கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு.
    • செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மைய பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


    தேசிய பாரம்பரிய பின்னணியில் வந்த அவர் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

    பொதுக்குழு கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை கண்டிக்கிற வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறேன்.

    கமல்ஹாசனின் அரசியல் பயணம் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
    • தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.

    மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.

    நடிகை கவியூர் பொன்னம்மா 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக அவர் நடித்துள்ளார்.

    மேலும் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கவியூர் பொன்னம்மா மறைவுக்க நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எல்லா நடிகர்களுக்கும் 'அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.

    தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.

    'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×