என் மலர்
நீங்கள் தேடியது "கமல்ஹாசன்"
- எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது.
- தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.
பிரபல மலையாள எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.
மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.
மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான 'கன்யாகுமரி' படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான 'மனோரதங்கள்' வரை அந்த நட்பு தொடர்ந்தது.
மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.
மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- நகைச்சுவையால் பலரையும் சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகர் விவேக் அனைவரையும் அறிமுகம் செய்ததே பாலசந்தர் தான்.
- அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அன்போடு அழைக்கப்படுவர் கே. பாலச்சந்தர். 80-90களின் தமிழ் திரையுலகை தீர்மானித்த முக்கிய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு துருவ போட்டி நடிகர்களை அறிமுகம் செய்தவர்.
அது மட்டுமின்றி தமிழ் திரையுலகில் பின்னாளில் அசாத்திய வில்லன் நடிகர்களான நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் தனது நகைச்சுவையால் பலரையும் சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகர் விவேக் அனைவரையும் அறிமுகம் செய்ததே பாலசந்தர் தான்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பலரை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும் என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 23, 2024
- திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்- 2’.
- இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் ஆஸ்கர் வென்ற மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கல் வெஸ்ட்மோர் இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இந்தியன் மற்றும் தசாவதாரம் படத்தில் இருவரும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'.
- இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'புராஜெக்ட் கே' படத்தின் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பிரபாஸின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Once Baahubali posters ki kuda trolls chusam ? ippudu #ProjectK kuda new to telugu audience ?
— Prabhas ❤ (@ivdsai) July 19, 2023
Look aithe adhirindhi ?? Next Glimpse on the way ?? yedche vaallu yedavandi, meerentha yedchina malli me movie highest lu 2 days Or me luck bagokapothe 1 day loney lechipoye… pic.twitter.com/8Ew7IHUJRM
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் 30 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.




மக்கள் நீதி மய்ய கட்சியை தொடங்கிய கமல் பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலை அடுத்தடுத்து சந்தித்தார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அக்கட்சி தேர்தலில் தோல்வியை தழுவியது.
பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.
இந்த நிலையில் கட்சியை பலப்படுத்த கமல் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் 12 சார்பு அணிகள் உள்ளன. மாணவர், மருத்துவர், விவசாயம், ஆதிதிராவிடர் என பல்வேறு அணிகள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக ஆதிதிராவிடர் அணியின் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் மவுரியா தலைமையில் நடந்தது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மற்ற 11 அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
11 வாரத்தில் இக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இறுதியாக அனைத்து அணி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்துகிறார்.
2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அடிப்படையில் இக்கூட்டம் அமைகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்து உள்ள நிலையில் அணி நிர்வாகிகைள அழைத்து கமல் பேச இருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் வெற்றியின் விளிம்பு வரை சென்று கோட்டை விட்டார். அரசியல் களத்தில் வெற்றி என்பது வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவது போல அல்ல என்பதை கமல்ஹாசன் நன்றாகவே உணர்ந்துள்ளார். ஆனால் கமல் கட்சியில் இணைந்து பணியாற்றிய நிர்வாகிகள் பலர், வேறு மாதிரி கணக்கு போட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில் தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிச்சயம் உடனே சிவப்பு கம்பளத்தை விரித்து விடுவார்கள் என்று கனவு கண்டனர். அந்த கனவு பலிக்காததால் கமல்ஹாசன் கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். மாநில நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளில் போய் தஞ்சம் புகுந்தனர்.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கோட்டை விட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை ஈட்டாததால் கட்சிக்குள் கடும் புகைச்சல் ஏற்பட்டது.
இதனால் “எங்கே போகும் இந்த பாதை...” என்கிற மனநிலைக்கு கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி தொடர் தோல்விகளால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலரும் விலகி ஓடி இருக்கும் நிலையில் மிச்சம் மீதி இருக்கும் கட்சியினரும் இங்கேயே இருக்கலாமா? இல்லையென்றால் வேறு கட்சிகளில் போய் சேர்ந்து விடலாமா? என்கிற எண்ணத்திலேயே காலத்தை தள்ளிக்கொண்டு சோர்ந்து போய் காணப்படுகிறார்கள்.
இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இதுபோன்று நிர்வாகிகள் பலர் ஓட்டம் பிடித்ததால் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு புதிய வியூகம் ஒன்றை வகுத்தார்.
இதன்படி மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து கட்சியை வழி நடத்தி செல்ல ஆட்கள் தேவை என்கிற விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இதனை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் காலியாக உள்ள மாவட்ட செயலாளர் பணி இடங்களுக்கு ஆட்களை தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படி கட்சியின் கூடாரம் காலியாகி கொண்டிருக்கும் நிலையில் நிதி நெருக்கடியும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெரிய தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பெரும்பாலான கட்சிகள் நிதி வசூல் செய்தே கட்சியை வழி நடத்தி வருகின்றன. ஆனால் கட்சி தொடங்கியதுமே கமல்ஹாசன், அது போன்று நாமும் செயல்படக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகள் சிலரோ நாமும் நன்கொடை என்ற பெயரில் பெரிய அளவில் நிதி வசூலில் இறங்கினால் மட்டுமே கட்சியை நடத்த முடியும் என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கமல்ஹாசனோ அதற்கு சம்மதிக்கவில்லை. அப்படி செயல்பட்டால் மற்ற கட்சிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் என்றும், மாற்றத்துக்கான கோஷத்தை நம்மால் எப்படி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் கண்டித்துள்ளார்.
கட்சிக்கு வரும் பணத்துக்கு உரிய கணக்கு காட்ட வேண்டும் என்றும் அதுதான் நேர்மையான அரசியலாக இருக்கும் என்றும் கமல்ஹாசன் தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்தே மக்களிடம் வெளிப்படையாக வங்கி கணக்கை தெரிவித்து நிதி திரட்டலாம் என்று திட்டமிடப்பட்டது.
இதன்படி கட்சிக்கு நிதி தாருங்கள் என்று கமல்ஹாசனே வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டார்.
மக்களிடம் நிதி திரட்டி கட்சியை வழி நடத்த திட்டமிட்ட மக்கள் நீதி மய்யத்தின் இந்த வியூகமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, எங்கள் தலைவரை பொருத்தவரையில் எதிலும் நியாயமாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். இதன் காரணமாகவே கட்சிக்கு யாரிடமும் நிதி வசூலில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி விட்டார். தனது வருமானத்தை வைத்தே அவர் கட்சியை நடத்தி வருகிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி வலுவான கட்சியாக மாற்ற கமல்ஹாசனும், கட்சி நிர்வாகிகளும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடித்தளம் இல்லை.
அதே நேரத்தில் நகர்புறங்களிலும் வலுவான அடித்தளம் அமையவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தொடர் தோல்விகள், கட்சியினர் ஓட்டம், கட்சி நிதி நெருக்கடி என தள்ளாடிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியை தூக்கி நிறுத்துவதற்கு கமல்ஹாசன் நிறைய திட்டங்களை கைவசம் வைத்துள்ளார் என்றும் அதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப கமல்ஹாசன், கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.