என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T.Rajender"

    • டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
    • மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!

    டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!

    டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்!

    மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை', சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த 'எங்க வீட்டு வேலன்' போன்ற திரைப்படங்களையும் மீண்டும், டி.ஆர்.டாக்கீஸ் வெளியிடுகிறது!

    இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக டி.ஆர்.டாக்கீஸ், ஒரு யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது!

    இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
    சென்னை:

    பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர். 

    அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், உடல்நலக் குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
    ×