என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    STR49 ப்ரோமோ வெளியீடு- வெற்றி மாறன் உலகில் காலடி வைத்த சிம்பு
    X

    STR49 ப்ரோமோ வெளியீடு- வெற்றி மாறன் உலகில் காலடி வைத்த சிம்பு

    • வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு.
    • கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

    தமிழ் சினிமா ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    அதன்படி, படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    Next Story
    ×