அரசன் படத்தில் இருந்து விலகலா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.
அரசன் படத்தில் இருந்து விலகலா?-  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி
Published on

நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், 'அரசன்' படத்தில் இருந்து தான் விலகுவதாக வெளியான தகவலுக்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,

அப்படி ஒண்ணும் கிடையாது. எனக்கே தெரியாது இப்படியான செய்திகள். வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன. யாரு பரப்புறதுன்னு தெரியல. இதையெல்லாம் நம்பாதீர்கள் என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com