என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்ஷிகா"

    டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

    நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகி சாய் தன்ஷிகா, அடிக்கடி டிரான்ஸ்பர் பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு வந்து சேருகிறார் சாய் தன்ஷிகா. அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொலை, அடிதடி, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் தாதா கபீர் துஹான் சிங்குடன் தன்ஷிகாவுக்கு நேரடி மோதல் உருவாகிறது.

    மத்திய அமைச்சராக இருக்கும் அண்ணன் ஷாயாஜி ஷிண்டேவின் அரசியல் ஆதரவுடன் வில்லன் கபீர் சிங் அராஜகம் செய்து வருகிறார்.

    இறுதியில் கபீர் சிங் செய்யும் அராஜகங்களுக்கு தன்ஷிகா எப்படி பதிலடி கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

    விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் வகையில், முழுக்க பெண் மைய ஆக்ஷன் படமாக யோகிடாவை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கவுதம் கிருஷ்ணா. ஆனால், கதையும் திரைக்கதையும் புதுமை இல்லாத வழக்கமான போலீஸ்–வில்லன் பாதையிலேயே பயணிக்கிறது. தாதா வில்லன், அரசியல் ஆதரவு, நேர்மையான அதிகாரிக்கு எதிரான சதிகள் என ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்களே அதிகம் இடம்பெறுகின்றன. வில்லன் கபீர் சிங், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பல கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்த்த அளவு அழுத்தமான காட்சிகள் அமையவில்லை.

    பூபதியின் ஒளிப்பதிவு மற்றும் கணேஷ் குமாரின் சண்டை அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றன. தீபக் தேவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மாலைமலர் ரேட்டிங்: 2 / 5

    • கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
    • இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.

    பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியானது. அதைதொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். யூகி சேது, இயக்குனர் மிஷ்கின், சினேகன், ரோபோ சங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

    அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி வருகிறது. கோயிலுக்கு போனாலாவது மன் நிம்மதி கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்தால் பிபி தன் ஏறுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.

    வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×