படப்பிடிப்பை நிறைவு செய்த சந்திரமுகி-2 படக்குழு

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’சந்திரமுகி 2’.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
சந்திரமுகி 2 படக்குழு
சந்திரமுகி 2 படக்குழு
Published on

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

சந்திரமுகி 2 படக்குழு
சந்திரமுகி 2 படக்குழு

சந்திரமுகி 2 படக்குழு

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். நேற்று 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

சந்திரமுகி 2 படக்குழு
சந்திரமுகி 2 படக்குழு

சந்திரமுகி 2 படக்குழு

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக புகைப்படங்கள் வெளியிட்டு நடிகை ராதிகா அறிவித்துள்ளார். மேலும், எனக்கு தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com