ஊத்துக்குளி பகுதியில் மோட்டார் சைக்கிள், பணம் திருட்டு- 2 வாலிபர்கள் கைது

பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது.திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அகமது நசீர், யாசர் அராபத்.
கைது செய்யப்பட்ட அகமது நசீர், யாசர் அராபத்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் பிரிவில் மளிகை கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இதேபோல் பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது. இந்த 2 குற்றத்திற்கும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஊத்துக்குளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது நசீர் (வயது 26), யாசர் அராபத் (வயது 24) ஆகிய 2 பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதை ேபாலீசார் கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com