தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிளில் வந்த மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம், ராசையா இருவரையும் போலீசார் சோதனை செய்தனர். 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டு மட்டக் கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 21), ராசையா என்ற கலாம் (23) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com