என் மலர்
இந்தியா

டெல்லியில் ரூ.27 கோடி போதைப்பொருட்கள் மீட்பு- 5 பேர் கைது
- சோதனை நடத்தி 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
- கடத்தலில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட 'எக்ஸ்' வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மோடி அரசு போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் சகித்துக்கொள்ளாது. தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் போதைப்பொருட்களுக்கு முடிவுகட்டும் வகையில் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் டெல்லி போலீசார் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இதன் பயனாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைப்பற்றபட்ட மெத்தபெட்டமைன் மற்றும் கோகைன் போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.27.4 கோடி ஆகும். இந்த கடத்தலில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story






