நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனர் பதவியேற்பு

நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக சீனிவாசன் பதவியேற்றுக்கொண்டார்.போலீஸ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்ட காட்சி.
புதிய போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்ட காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக இன்று சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், வல்லம், கும்பகோணம், தென்காசி, திருச்சி, கோட்டை, பொன்மலை ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

2021-ம் ஆண்டு நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராகவும், பின்னர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.

இவர் பணி காலத்தில் அண்ணா பதக்கம் மற்றும் அத்திவரதர் பதக்கம் பெற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com