போலீஸ் துணை கமிஷனராக கவுதம் கோயல் நியமனம்

சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
போலீஸ் துணை கமிஷனராக கவுதம் கோயல் நியமனம்
Published on

சேலம்:

சென்னை தலைமை கூடுதல் செயலாளர் நேற்று ஏ எஸ் பி களுக்கு பதவி உயர்வு மற்றும் துணை கமிஷனர்களை மாறுதல் செய்து உத்தரவிட்டார்.சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியாற்றிய கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இதேபோல் வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் துணை சூப்பிரண்டு குணசேகரன் சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். சேலம் மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் பணியாற்றிய மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுவதால் இன்று காலை முதல் சேலம் மாநகரத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com