

அனுப்பர்பாளையம்:
திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டுளளார். திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த இவர், திருமுருகன்பூண்டிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை (திங்கட்கிழமை) திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.