search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிஷனர்"

    • 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்ற வைகள் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

    ஆனால் இதுவரை பலர் வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த மாதத்திற்குள் வரியை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டது.

    பெரும்பாலானோர் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்ப நேரம் ஆகிவிடுவதால், அவர்கள் வரியை கொண்டுவந்து மையங்களில் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்து எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    அதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களும் கூடுதல் நேரம் செயல்பட அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக வரித்தொகைகளை செலுத்திட ஏதுவாக வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து வரிவசூல் மையங்களும் நேற்று முதல் கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மையங்களில் நேற்று இரவு நேரத்திலும் பெரும்பா லானோர் தங்களது வரி களை செலுத்தினர். இதனை பயன்படுத்தி 2023-2024ம் ஆண்டிற்கான வரித் தொகைகளை உடனடியாக செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகனாவுடன் குணசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதுடன் சந்தேகப்பட்டு தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மோகனாவின் சொந்த ஊர் ஓமலூர் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
    • அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி கமிஷனராக முகமது சம்சுதீன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு திருப்தி அளிக்காததால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து அவர் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, பவானி கமிஷனராக இருந்த தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருசில நாட்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து காங்கயம் நகராட்சி பொறுப்பு கமிஷனராக இருந்த பன்னீர்செல்வமும், அதைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமாரும் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக பணியாற்றினர். வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே அவர்கள் வந்து சென்றதால் அலுவல் பணிகள் தடைபட்டது.

    இதையடுத்து நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது. இதனால் கவுன்சிலர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள். இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ஹாரீஸ் சிவகங்கை மாவட்டத்திற்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக திட்டக்குடி நகராட்சி கமிஷனர் ஆண்டவன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

    • திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன.
    • குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரப்பகுதியில்உள்ள போலீஸ் நிலையங்களில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன. இதில் அனுப்பர்பாளையம், கொங்கு நகர், கே.வி.ஆர். நகர், நல்லூர் என 4 சரகமாக பிரிக்கப்பட்டு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளி மாநில,மாவட்ட மக்கள் அதிகம் தங்கி பணியாற்றும்திருப்பூர் மாவட்டத்தில்கொலை, கொள்ளை,ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள்அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்நிலையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, அனுப்பர்பாளையம்,வடக்கு, தெற்கு, நல்லூர்போலீஸ் நிலையங்களில் திடீரென ஆய்வுமேற்கொண்டார். அப்போது அங்கிருந்தபொதுமக்களிடம் தங்கள்கோரிக்கைகள் குறித்துகேட்டறிந்தார். மேலும், போலீசாரிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அேதபோல் நீண்ட நேரம்போலீஸ் நிலையங்களில் யாரையும் உக்கார வைக்காமல் ெபாதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும். குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். லாக்கப் மரணம் நிகழாமல் பார்த்துக்ெகாள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். 

    ×