மண்எண்ணை கேனுடன் வந்த பெண்

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.
மண்எண்ணை கேனுடன் வந்த பெண்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகனாவுடன் குணசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதுடன் சந்தேகப்பட்டு தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மோகனாவின் சொந்த ஊர் ஓமலூர் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com