என் மலர்
நீங்கள் தேடியது "கலெக்டரிடம் மனு"
- வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்
- கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வடக்குமாதவி 8 வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை தனி நபருடையது. அந்த பாதையை ஒருவர் கிரையம் செய்து வாங்கிவிட்டார். ஆகையால் அந்தபாதையை பயன்படுத்தமுடியவில்லை. ஆகையால் ஏரிக்கரையிலிருந்து வடக்குமாதவி ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் 1983ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய அலோபதி மருத்துவமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த மருத்துவ மனைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு 2006ம் ஆண்டு நிதி ஒதுக்கியது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனை கட்டிடடம் கட்டப்பட்டு 2013ம்ஆண்டு வரை அலோபதி மருத்துவமனை இயங்கி வந்தது. அரசின் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது, தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் பயன்பாடின்றி கிடக்கிறது.
இந்நிலையில் கீழப்பூலியூரில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
- வாய்க்கால்களை தூர் வாரகோரி கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது
- விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் அளித்தார்
திருச்சி:
தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை தலைவர் மனோகரன், திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போது சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு லட்சக்கணக்கில் முதலீடு செய்து நாற்று நட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு , கடைகள் கட்டி வைப்பதால் மழைக்காலங்களில் நீர் செல்வதற்கு இடமில்லாமல் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவும் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
பெட்டவாய்த்தலையில் உள்ள அய்யன் வாய்க்கால் கடந்த இரண்டு வருடமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து கடமடை பகுதிக்கு நீர் செல்ல முடியாமல், சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று முசிறி, காட்டுப்புத்தூர், ஆமூர், அய்யம்பாளையம், செவந்தலிங்கபுரம், ஆசாரி பாளையம், வெள்ளூர், போன்ற பகுதிகளில் செங்கல் காளவாய் உரிமையாளர்கள், வாய்க்கால் பகுதிகளை ஆக்கிரமித்து நீர் செல்ல முடியாத வகையில் உள்ளது . இதனால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ய முடியாமல் வீடு கட்டும் நிலங்களாக மாறி வருகிறது.
இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொ றியாளர்களுடன் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்கள் மீதான நடவடிக்கையில் 30 நாட்களுக்குள் மேற்படி பணிகளை அதிகாரிகள் செயல்படாவிட்டால் தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பாச பரிமளம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி முசிறி கைகாட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.
- காளப்பன அள்ளி ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
- ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பன அள்ளி ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தருமபுரி நகரப் பகுதியை அடுத்த சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குண்டல்பட்டி அருகே தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி குழந்தைகளை ஏற்றி வருவதற்கு தனியாரிடம் ஒப்பந்த முறையில் வாகனம் வைத்துள்ளது.
இந்த வாகன ஓட்டிகள் நேற்று காலை சுமார் 8 மணிக்கு மாட்லாம்பட்டி அடுத்த காளப்பன அள்ளி சாலை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றி கொண்டு சாலையில் வந்து கொ ண்டிருந்தபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளார்.
விபத்தின்போது 3 பள்ளி வாகனங்களை அடுத்தடுத்து இயக்கியுள்ளனர்.மேலும் பள்ளி வாகனத்தை அதிக சத்தத்துடன் கூடிய இசையை கேட்டுக்கொண்டே ஓட்டுகின்றனர்.
இந்த விபத்து நடந்ததற்கு முழு காரணம் பள்ளி நிர்வாகமே ஆகும். மேலும் அந்த பள்ளி வாகனத்தில் 20 பள்ளி குழந்தைகள் இருந்தார்கள். விபத்து ஏற்படும் பகுதிக்கு அருகில் மேலும் ஒரு தனியார் பள்ளிக்கூடம் இயங்கிக்கொண்டு வருகிறது.
அந்த பள்ளிக்கூடம் விட்டிருந்தால் அங்கிருந்து வெளியே வரும் குழந்தைகளின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க உடனடியாக மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்கள் இயக்குவது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து எங்களை தொழில் செய்ய முடியாமல் தொந்தரவு செய்து வருகின்றனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்திற்கு முன்பு 60-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக கடைகளின் உரிமையாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் வணிக கடைகளை 60-க்கும் மேற்பட்டோர் வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறோம். எங்கள் கடைகளுக்கு முன்பு நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து எங்களை தொழில் செய்ய முடியாமல் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
வணிக கடைகளுக்கு முன்பு தொல்லை கொடுத்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு வணிகர்கள் மனு கொடுத்தனர்.
இதேபோல் தருமபுரி அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் கொடுத்த மனுவில் மின்சாரம் தாக்கி நான்கு கால் விரல்கள் எடுக்கப்பட்டதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாததால் என் குடும்பம் வறுமையில் உள்ளது. அதனால் என்னுடைய மருத்துவ செலவிற்காக நிதி உதவி வழங்க வழிவகை செய்ய வேண்டும்என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
- மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
கிருஷ்ணகிரி,
பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மரிமானப்பள்ளி கிராமம் இருளர் காலனியை சேர்ந்த, 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பர்கூர் தாலுகா, மல்லப்பாடி ஊராட்சி மரிமானப்பள்ளி கிராம இருளர் காலனியில், 33 குடும்பங்களை சேர்ந்த, 90 பேர், 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைவசதி, ஜாதி சான்றிதழ், சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எங்கள் வீடுகளும் சிதிலமடைந்து உள்ளன. குடிநீருக்காக, 3 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அவலம் உள்ளது.
இந்நிலையில் மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் கம்பங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள் இருளிலும், மழையிலும், விஷக்கடி பயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்காலிக பட்டா வழங்கப்படும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறைப்படி இடத்தை அளவீடு செய்து நிரந்தர பட்டா வழங்க வில்லை. குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் கல்வி தொடர முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக உருவாகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3 நாள் நடை பயணமாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
- சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது.
ராமநாதபுரம்
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் நடந்தது. நேற்று மாலை பட்டினங்காத்தான் இ.சி.ஆர். சாலையில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள் நடைபயணம் மேற்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் ஊரக வளர்ச்சித் துறை சோமசுந்தர் வரவேற்றார். தமிழ்நாடு விடுதிகள் காப்பாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மணிமொழி, சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வருவாய்த்துறை சீனி முகம்மது உள்பட பலர் பேசினர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பத்திரப் பதிவுத்துறை சுரேஷ், கருவூலத்துறை கிருஷ்ணமூர்த்தி, மருத்துவத்துறை சின்னபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
- கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
- 3 ஆண்டுகள், கடிதம் வழியாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். சுமார் 3 ஆண்டுகள், கடிதம் வழியாக தொடர்பில் இருந்த பழனிவேல், அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளார்.
இந்நிலையில், பழனிவேலை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த முகவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. மேலும் பழனிவேல் சவுதியில் வேலை பார்ப்பதாக நண்பர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்திற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து வெளிநாட்டில் உள்ள தங்களின் தம்பியை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிவேலின் சகோதரி பழனியம்மாள் கண்ணீர் மல்க, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்து உள்ளார்.
- ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
- இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர்.
சேலம்:
சேலம் முருங்கப்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் பெத்தாம்பட்டியில் 45 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தவமணி என்கிற ராஜகணபதி, தமிழன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நாங்கள் கூட்டு குடும்பமாக, விசைத்தறி தொழில் செய்து வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே எங்களுக்குள் நிலப் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
நேற்று முன்தினம், எங்கள் நிலத்தை அளந்து சர்வேயர் எல்லை கல் நட்டார். அடுத்த சில மணி நேரத்தில், துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகிய இருவரும் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு சென்றனர். தற்போது எனது மூத்த மகன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளனர்.
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
- நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியா கதுருகம் மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தமிழக அரசின் டெங்கு காய்ச்சல்,மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 தினக்கூலியாக வழங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
- திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
- மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மக்கள் உரிமை கூட்டணி மாநில பொதுச் செயலாளர் விஸ்டம் கமருதீன் மனு அளித்தார். அதில், நகரில் செயல்பட்டு வரும் மருதுபாண்டியர் அரசு மருத்துவ மனையில் விபத்து போன்ற காலகட்ட ங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
பொது பிரிவுக்கு என்று மட்டும் தற்சமயம் மருத்துவர்கள் இருந்து வரும் நிலையில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா உடனிருந்தார்.
- தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.
- பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள் பகுதியில் சுமார் 30 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் 2க்கு 2 அளவுள்ள தள்ளுவண்டியில் 30 பேர் கடலை, பொரி வியாபாரம் செய்து வருகிறோம்.
தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது. தற்போது திருப்பூர் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து , பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- 100 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கிராம மக்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த அன்னசாகரம் கிராமத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான விநாயகர் சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமாக அருகில் உள்ள இடத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.
அதில் அந்த மக்கள் வீடு கட்டி, பல தலைமுறைகளாக தற்பொழுது வரை வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த ஒருவர் கோவில் நிலம் முழுவதையும், ஆக்கிரமிப்பு செய்து, இறந்து போன தந்தை பெயரில் போலியாக ஆவணங்களை தயாரித்து உள்ளார்.
தொடர்ந்து கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். ஆனால் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் கிராம மக்களை, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பட்டா பெற்றுள்ளதாக பல்வேறு அலுவலகங்களில் மனு கொடுத்தும், தொடர்ந்து கிராம மக்களை மிரட்டியும் வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்து சில நாட்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் இந்த பகுதிகளை விசாரணை செய்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் அரசு வழங்கியது தான் என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என கூறி அன்னசாகரம் கிராமத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தனித்தனியாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கிராம மக்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.
கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






