என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த அரூர் வியாபாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளி வாலிபரை படங்களில் காணலாம்.
அரூர் பஸ் நிலையம் எதிரில் வணிக கடைகளுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு
- நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து எங்களை தொழில் செய்ய முடியாமல் தொந்தரவு செய்து வருகின்றனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்திற்கு முன்பு 60-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக கடைகளின் உரிமையாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் வணிக கடைகளை 60-க்கும் மேற்பட்டோர் வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறோம். எங்கள் கடைகளுக்கு முன்பு நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து எங்களை தொழில் செய்ய முடியாமல் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
வணிக கடைகளுக்கு முன்பு தொல்லை கொடுத்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு வணிகர்கள் மனு கொடுத்தனர்.
இதேபோல் தருமபுரி அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் கொடுத்த மனுவில் மின்சாரம் தாக்கி நான்கு கால் விரல்கள் எடுக்கப்பட்டதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாததால் என் குடும்பம் வறுமையில் உள்ளது. அதனால் என்னுடைய மருத்துவ செலவிற்காக நிதி உதவி வழங்க வழிவகை செய்ய வேண்டும்என்று கோரிக்கை விடுத்துள்ளார்.






