search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intelligence police"

    • ஆற்றுவாய் பகுதியில் நின்றிருந்த படகை போலீசார் சோதனையிட்டபோது அந்த படகு இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.
    • இலங்கை மன்னார் பகுதி படகில் வந்திறங்கிய இருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் பைபர் படகு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மரைன் மற்றும் மண்டபம் போலீசார், உளவு பிரிவினர் அங்கு விரைந்து வந்தனர். ஆற்றுவாய் பகுதியில் நின்றிருந்த படகை போலீசார் சோதனையிட்டபோது அந்த படகு இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தது என தெரியவந்தது.

    இந்த படகு மூலம் கடத்தல்காரர்கள் அல்லது இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊடுருவியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் உளவுத்துறை போலீசார் படகில் வந்தவர்கள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் வேதாளை கிராம பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது

    ராமநாதபுரம் அருகே பெருங்குளம் பகுதியில் நேற்று இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சி கொல்லி மருந்து பாட்டில்கள் பிடிப்பட்ட நிலையில், இலங்கை மன்னார் பகுதி படகில் வந்திறங்கிய இருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    • மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது.
    • ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீசில், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த போலீசாரை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் நிலையம் வாரியாக நுண்ணறிவு பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டவிரோத செயல்கள், ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

    இப்பிரிவு முழுமையாக, போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்படும்.நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீசாரை இடமாற்றம் செய்ய சமீபத்தில் பட்டியல் தயார் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது.இச்சூழலில், ஐ.எஸ்., பிரிவில், அலுவலக, ஸ்டேஷன் பணியை மேற்கொண்டு வந்த நிவாஸ் சக்கரவர்த்தி, ரகுபதி, கணேஷ்குமார், பிரபு, பிரகாஷ், குப்புசாமி, ஜான் பிரவின், சத்யமூர்த்தி, சார்லி என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தெற்கு, திருமுருகன்பூண்டி, வீரபாண்டி, நல்லூர், அனுப்பர்பாளையம், வடக்கு ஆகிய ஸ்டேஷன்களை சேர்ந்த பூபதி, கார்த்திகேயன், ஜெயசந்திரன், பாலசுப்ரமணியன், குமார், நாகேந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை ஐ.எஸ்., பிரிவுக்கு மாற்றி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    சேலத்தில் உளவுப்பிரிவு ஏட்டு வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47). இவர், சேலம் மாநகர காவல் துறையில் சூரமங்கலம் பகுதி நுண்ணறிவுப்பிரிவு (ஐ.எஸ்) ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலையில் ஏட்டு நடராஜன் வீட்டில் இருந்தார். அப்போது, 2 பேர் அங்கு வந்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த நடராஜன் நேராக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவருக்கு டாக்டர்கள், அடிப்பட்ட இடத்தில் மருந்துகள் வைத்து சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து நடராஜன் வீட்டிற்கு திரும்பினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் போலீஸ் ஏட்டை தாக்கியவர்கள் அவரது உறவினர்கள் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளவுப்பிரிவு ஏட்டு வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×