திருமுருகன்பூண்டி நகராட்சி - புதிய பெண் கமிஷனர் பொறுப்பேற்பு

முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார்.
 புதிய கமிஷனராக தாமரை பொறுப்பேற்றுக் கொண்ட போது எடுத்தப்படம். அருகில்  நகராட்சி  தலைவர் குமார், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளனர். 
 புதிய கமிஷனராக தாமரை பொறுப்பேற்றுக் கொண்ட போது எடுத்தப்படம். அருகில் நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளனர். 
Published on

   அனுப்பர்பாளையம்  : 

திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக இருந்த முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி கமிஷனராக இருந்த தாமரை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தாமரை திருமுருகன்பூண்டி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய கமிஷனராக பொறுப்பேற்ற தாமரை, மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார். முன்னதாக தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப் பட்ட கமிஷனர் முகம்மது சம்சுதீனுக்கு வழியனுப்பு விழாநடைபெற்றது .

இதில் தலைவர் குமார் தலைமையில் துணைத் தலைவர்,கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அனைவருக்கும் கமிஷனர் முகம்மது சம்சுதீன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com