என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா அமெரிக்கா உறவு"
- இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
- இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.
தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என அதிபர் டிரம்ப் சொல்லி வருகிறார். மேலும், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒருவர் கூறும் போது,"இந்தியாவுடன் எங்களுக்கு 2 விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நிச்சயமாக எங்களுக்குள் ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்" என தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
- அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மலேசியா கோலாலம்பூரில் 19-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சி மாநாடு நாளை (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கு முன்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் கோலாலம்பூரில் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்கா- இந்தியா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக பீட் ஹெக் செத் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியா- அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் படைகளுக்கும் ஒரு முக்கியமான படிக்கல்லாகும். இது பாதுகாப்பு மற்றும் நமது வலுவான கூட்டாண்மைக்கான அமெரிக்காவின் நீண்ட கால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது,"இந்த கட்டமைப்பில் கையெழுத்திட்டது இந்தியா- அமெரிக்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. ஹெக்செத் தலைமையின் கீழ் உறவுகள் மேலும் வலுப்பெறும்" என தெரிவித்தார்.
- ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும்.
- ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவுடன் வர்த்தக மோதலை துணிச்சலாக பார்க்கிறோம். ஏனென்றால் மிகப்பெரிய வாடிக்கையாளருடன் சண்டையிடுவது நன்றாக இருக்கிறது. ஆனால் இறுதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும். விரைவில் அமெரிக்காதான் தேவை என்று சொல்வார்கள்.
50 சதவீத வரியை நீக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும். அவர்கள் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள். டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிக்கும்போது, மோடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்வார்"என்றார்.
அதேபோல் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில்,"இந்தியா விதிக்கும் அதிகபடியான வரியால் அமெரிக்க வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன். ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.
ரஷியாவின் போர் இயந்திரத்திற்கு உணவளிக்கிறது. போரில் உக்ரேனியர்கள், ரஷ்யர்கள் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் அதிகமாக செலவிடுகிறார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- இந்தியாவும், பிரதமர் மோடியும், அமெரிக்காவிற்கு உதவக்கூடிய முக்கிய கூட்டாளிகள்.
- பிரதமர் மோடியும், அதிபர் பைடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர்.
வாஷிங்டன்:
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை தேசிய ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளதாவது:
இந்தியா-அமெரிக்கா வரலாற்றில், 2022 ஆண்டு முக்கியமானது. அடுத்த ஆண்டு இரு நாடுகளிடையேயான உறவு இன்னும் வலுவடையும். சர்வதேச அளவிலான பிரச்சினைகளில் அமெரிக்காவிற்கும், அதன் அதிபர் ஜோபைடனுக்கும் உண்மையிலேயே உதவக்கூடிய கூட்டாளிகளை உலகம் முழுவதும் தேடும் போது அந்த பட்டியலில் இந்தியாவும், பிரதமர் மோடியும் முக்கிய இடத்தை பெறுகின்றனர்.
ஜி-20 உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் நாங்கள் இதை பார்த்தோம்., அணுசக்தி பிரச்சினைகள் தொடர்பாக அதிகரித்து வரும் ஆபத்தை இந்திய அரசு முன்னிலைப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியும், அதிபர் பிடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர், சமீபத்தியது சந்திப்பு கடந்த வாரம் பாலியில் நடந்துள்ளது.
குவாட் உச்சி மாநாடு அடுத்து நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா வகிக்க உள்ளது. அதை நாங்கள் அனைவரும் எதிர்நோக்குகிறோம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு மிக முக்கிய ஆண்டாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






