என் மலர்
நீங்கள் தேடியது "Deputy President"
- ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.
- தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

அவரது ராஜினாமா கடிதத்தில் "உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக" தான் விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது திடீர் முடிவு பல ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு அவரது உடல்நலக்குறைவைத் தாண்டி, வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தன்கரிடம் சமர்ப்பித்தன.

இதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஊழல் ஒழிப்பு குறித்து அரசு வேறு வழியில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தன்கரின் இந்த நடவடிக்கை, அரசுடன் அவருக்கு பிளவு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி தன்கர் மீது அவநம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரத் தயாரானதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.
ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கவில்லை. இது தன்கரை அவமதிக்கும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவருக்குத் துணை ஜனாதிபதி பதவியை அளிக்கும் திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்தது என்றும், அதற்காகவே தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் ஆவார்.
இவருக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, செப்டம்பர் 12 அன்று சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
சர்ச்சைக்கிடமாக ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது உயர் அரசியலமைப்புப் பதவியான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
- குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- அரசியலமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து கொண்டிருக்கிறது.
சென்னை வந்துள்ள இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
அவர், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் சுதர்சன் ரெட்டியை ஏற்று கொண்டுள்ளனர்.
அரசியலமைப்பின் மாண்பை போற்றி பாதுகாத்தவர் சுதர்சன் ரெட்டி. அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்து கொண்டிருக்கிறது.
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக பேசியவர் சுதர்சன் ரெட்டி. தமிழகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் சுதர்சன் ரெட்டி.
முன்னாள் நீதியரசன் குறித்து நக்சல் என விமர்சிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. பயங்கரவாதிகளை ஒழிக்க முடியாத அமித்ஷா, சுதர்சனை விமர்சிக்கிறார்.
அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு தமிழன் என்ற முகமீடி அணிந்து ஆதரவு கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
- ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.
- கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவியது
நேற்று நடந்த பாராளுமன்ற மக்களை கூட்டத்தொடரில் ராகுல் காந்தியின் அதிரடி உரை அவையை களேபரம் ஆகியது தெரிந்ததே. அதேசயம் பாராளுன்றத்தில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் மக்களவையில் நடந்ததற்கு நேர் மாறாக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்களால் சிரிப்பலை ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேச எழுந்த போது தனக்கு கால்வலி இருப்பதால் உட்கார்ந்து பேச கார்கே அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கார்கே, 'ஆமாம் நீங்கள் எங்களுக்கு [எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு] சில சமயம் உதவுகிறீர்கள். நான் அதை நினைவு கூர்கிறேன்' என்று நகைச்சுவை தொனிக்க தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி உரை குறித்து தொடர்ந்து பேசத் தொடங்கிய கார்கே பாஜக எம்.பி சுதான்சு சதுர்வேதியை குறிப்பிட்டு பேசும்போது, இடையில் நிறுத்தி, 'மன்னிக்கவும், திவேதி, திரிவேதி, சதுர்வேதி ஆகிய பெயர்கள் என்க்கு எப்போதும் குழப்பமாக உள்ளது.
நான் தெற்கில் [தென்னிந்தியாவில்] இருந்து வருவதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; என்று நகைச்சுவையாக தெரிவிக்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.இதற்கு சிரித்தபடி பதிலளித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், 'நீங்கள் விரும்பினால் இந்த விவகாரம் குறித்துஅரை மணி நேரத்துக்கு வேண்டுமானாலும் நாம் விவாதிக்கலாம்' என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவிய நிலையில் நேற்றைய கூட்டம் அந்த இறுக்கத்தை தளத்தியது என்றே கூறலாம். கடந்த ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டொடர் நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தத்க்கது.







