என் மலர்
நீங்கள் தேடியது "குடியரசு துணை தலைவர்"
- துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.
- துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இன்று காலையிலும் அவர் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினார். இதற்கிடையே அவருக்கு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. பதவி ஏற்பு நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அதற்கு ஏற்ப அழைப்பிதழ் வெளியிடப்படும்.
துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.
தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார்.
- முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
- மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின.
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய காட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் விரைவில் தெரிந்து விடும். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
- மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.
புதுடெல்லி:
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி உறுதியானது.
இதற்கிடையே இந்த தேர்தலில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும்? என தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலும், 'இந்தியா' கூட்டணி சார்பிலும் தங்களது அணி எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 'இந்தியா' கூட்டணி இதனை ஒரு மாதிரி தேர்தலாகவே நடத்திப் பார்த்தது.
பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த வாக்களிப்பு ஒத்திகையில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களும், அந்தந்த கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் தேர்தல் பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் தனித்தனியாக கலந்து ஆலோசித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க தயார் ஆனார்கள்.
இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சி, இந்த தேர்தலில் பங்களிக்கப்போவது இல்லை என தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் எம்.பி.யான சஸ்மித் பத்ரா இதனை புவனேஸ்வரில் தெரிவித்தாலும், டெல்லியிலும் இதனை உறுதி செய்தார்.
இந்த கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 7 பேர் இருக்கிறார்கள்.
இதைப்போல பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியும் தேர்தலை புறக்கணிக்கிறது. அந்த கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமராவ் இதனை அறிவித்தார். இந்த கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
தேர்தலின் போக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை காட்டுகிறது என்றே சொல்லலாம். இருப்பினும் இரு அணிகளும் நேற்று வாக்களிப்பில் வெற்றிகரமாக பங்கேற்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை நடத்தின.
இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
- குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
- ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
73 வயதான ஜகதீப் தன்கர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 நாள் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் கொண்டுள்ளதால் இன்று (மார்ச் 12) மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு துணைத் தலைவரின் உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வந்தோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்த பிறகு, எய்ம்ஸ் மருத்துவக் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையிலான உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செனகல் நாட்டின் தலைநகரான டாக்காரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த குழுவில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் இடம்பெற்று கலந்துகொண்டார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் கவுரவத்தையும், சிறந்த எதிர்காலத்தை பற்றிய அதன் பார்வையை குறிக்கும் ஆப்பிரிக்க மறுமலர்ச்சியின் நினைவு சின்னத்தை பார்வையிட்டனர். பின்னர் டாக்கரில் உள்ள ஆப்பிரிக்க கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் களஞ்சியமாக உள்ள கருப்பு நாகரீகங்களின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
இது ஆப்பிரிக்காவின் கலாச்சார மற்றும் அறிவியல் பங்களிப்புகளை முன்னிலைப் படுத்துவதின் நோக்கமாக அமைந்துள்ளதாக இந்திய குழுவினர் பாராட்டினர். தொடர்ந்து டக்கார் பைனாலே 2022 என்னும் சமகால ஆப்பிரிக்க கலை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சர்வதேச கலைக்கண்காட்சியை உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இந்திய குழுவினருக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்கப்பட்டனர்.






