என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagadeep Thankar"

    • குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
    • ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.

    குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மசோதா மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது.
    • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    புதுடெல்லி:

    தமிழக அரசு சார்பில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜனாதிபதிக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்து உத்தரவிட்டது. அதாவது, மசோதா மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்து இருந்தார்.

    இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது.

    அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை. இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இரு விதமான கருத்துகளை கூறுகிறது.

    நமது மவுனம் ரொம்ப ஆபத்தானது. சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நாளை (21-ந் தேதி) திருவனந்தபுரம் வருகிறார். அங்கு பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    மறுநாள் அவர் திருவனந்தபுரம் சட்டசபை கட்டிட வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது இது தொடர்பான நினைவு சின்னத்தையும் திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • காங்கிரசை சேர்ந்த மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்
    • அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.

    வங்காளதேசத்தில் நடந்ததது இந்தியாவிலும் நடக்கலாம் என்று கருத்துக்கு ஜெகதீப் தன்கர் கண்டனம் 

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஷேக் ஹசீனா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரானதாக மாறியது. இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது. மாளிகையைப் போராட்டக்காரர்கள் சூறையாடிய நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    வங்காளதேச ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்துள்ளது. இந்நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், இப்போது பார்ப்பதற்கு எல்லாம் சாதாரணமாக இருப்பது போல் உள்ளது. ஆனால் வங்காள தேசத்தில் தற்போது நடந்து வருவது இந்தியாவிலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

     

    மேலும் காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவனந்தபுர எம் .பி சசி தரூர், வங்காள தேசத்தில் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

    தற்போது இந்த கருத்துக்கள் குறித்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பவள விழாவில் பேசிய ஜககீத் தன்கர், ஜாக்கிரதையாக இருங்கள், அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நாட்டின் குடிமகனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு இவ்வாறு பேச முடிகிறது என்று கேள்வியெழுப்பினார். மேலும், தேச விரோத சக்திகள் அரசியலமைப்பைப் பயன்படுத்தி நாசகர வேலைகளை நியாயப்படுத்தி வருகிறது என்று எச்சரித்துள்ளார். 

    • இதில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும்.
    • மக்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:

    உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். மக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிப்பதுடன், அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 


    இந்த முக்கியமான பிரச்சினையில் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் பங்கேற்க வேண்டும். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்கும் தாதிச்சி தேஹ்தன் சமிதி அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×