என் மலர்
நீங்கள் தேடியது "Kerala Vice President"
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நாளை (21-ந் தேதி) திருவனந்தபுரம் வருகிறார். அங்கு பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
மறுநாள் அவர் திருவனந்தபுரம் சட்டசபை கட்டிட வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது இது தொடர்பான நினைவு சின்னத்தையும் திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






