"சுய நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி" வர்த்தக ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி கருத்து!

வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
"சுய நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி" வர்த்தக ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி கருத்து!
Published on

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தம் குறித்து இந்தியா அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில், வர்த்தக ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் சக்தி என்றும், அது விக்சித் பாரத் கனவை நனவாக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "சுய நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் ஒரு சக்தி. அதன் உதவியால் எல்லாமே சாத்தியமாகும். நாட்டு மக்களின் இந்த சக்தியே, வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமையும்," என தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com