என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS House adjourned"

    • பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதை சுட்டிக்காட்டி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் தர்மேந்திரா யாதவ், ஜெயா பச்சன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வின் சுதாம பிரசாத் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்திய நலனில் மத்திய அரசு சரண் அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக எழுதப்பட்ட வாசகத்தை வைத்து இருந்தனர். மேலும், பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டார் என்ற வாசகத்தையும் அவர்கள் கையில் வைத்து இருந்தனர்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.

    என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து நேற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறவில்லை. மக்களவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.



    இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவு விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது. மாநிலங்களவை இன்று துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு என்ஆர்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என தலைவர் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    மேலும், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு  தெரிவித்தார். #AssamNRC #RajyaSabhaAdjourned
    ×